மும்பை: பாலிவுட்டோ, டோலிவுட்டோ, கோலிவுட்டோ எங்கு யார் பிரிந்தாலும் அதாவது, காதலர்கள், திருமணம் ஆனவர்கள், திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவில் இருந்தவர்கள் என யார் பிரிந்தாலும், உடனே பலரும் சேர்த்து வைத்து பேசுவது ஒரு நடிகரை தான். அப்படித்தான் இப்போதும் அந்த நடிகரின் தலையில் புது கணக்கு ஒன்று எழுதப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் கோலிவுட்டில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி மீது அதிர்ச்சி தரக்கூடிய விவாகரத்து சம்பவங்கள் நடைபெற்றது. இந்த விவாகரத்து சம்பவத்திற்கும் அந்த நடிகருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். அப்படி இருக்கும்போது, அந்த விவாகரத்துகளும் அந்த நடிகருக்கும் தொடர்பு இருப்பதாக சம்பந்தம் இல்லாமல் இணையவாசிகள் தொடங்கி, சில சினிமா பிரபலங்களுமே தெரிவித்து வந்தார்கள். குறிப்பாக கடந்த ஆண்டு விவாகரத்தை அறிவித்த நடிகர் ஒருவர் இப்போது தனது மனதுக்கு நெருக்கமான பெண்ணுடன் செம ஜாலியாக இருக்கிறார். இது குறித்து தாமதமாக தெரிந்து கொண்ட இணையவாசிகள், அதற்கு முன்னர் அந்த விவாகரத்து கணக்கையும் இந்த நடிகர் தலையிலேயே எழுதினார்கள்.
நடிகருக்கு இப்படி ஒரு ராசி: இந்த நடிகர், நல்ல கதை அமைந்தால் எல்லா மொழிப் படங்களிலும் நடிக்கும் பழக்கத்தை வைத்திருப்பவர். இப்படி இருக்கும்போது இவர் பாலிவுட் படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். இப்படி இருக்கும்போது நடிகர் தற்போது இந்தியில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அவரது இந்தி படத்தின் படப்பிடிப்பு காலத்தில் பாலிவுட் பிரபலமான ஒரு நடிகரும் பான் இந்தியா ஸ்டாராக உள்ள நடிகையும் காதலித்து வந்தார்கள். லவ்வுனா லவ்வு உங்க வீட்டு லவ்வு இல்ல, எங்க வீட்டு லவ்வு இல்ல, உலகமகா லவ்வு எனக் கூறும் அளவுக்கு அவர்களுக்குள் செம கெமிஸ்ட்ரி. பாலிவுட் பிரேக் அப்: அவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானாலே, ஹாட் டாப்பிக் ஆஃப் த சிட்டியாக மாறிவிடும். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இந்த ஜோடி பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவல் உண்மைதான் எனக் கூறும் அளவுக்கு சம்மந்தப்பட்ட நடிகர் மற்றும் நடிகையின் நடவடிக்கைகள் இருந்தது. அப்படி இருக்கும்போது அவர்கள் பிரிந்து விட்டார்கள் என்பதை இணையவாசிகள் உறுதி செய்து விட்டார்கள்.
நடிகர் தலையில்: இந்நிலையில் படப்பிடிப்பில் இருந்த நடிகரின் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது. இதனால் படக்குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பார்ட்டில், காதலரைப் பிரிந்த நடிகையும் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகவே, இணையவாசிகள் அந்த நடிகையின் காதல் பிரிவுக்கும் இந்த நடிகர்தான் காரணம் என பேசி வருகிறார்கள். இதைப் பார்த்த நடிகரின் ரசிகர்களோ, இந்த கணக்கையும் எங்க அபிமான நடிகர் தலையில் எழுதீட்டீங்களே என பேசி வருகிறார்கள்.